உள்நாடு

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதி சடங்கு தொடர்பில் வௌியான தகவல்

வென்னப்புவ, லுணுவில பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் 4ஆம் திகதி முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல் இன்று (02) லுணுவிலவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் இன்று மாலை இரத்மலானையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் லுணுவில பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில், அதன் பிரதான விமானியாக செயற்பட்ட விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாப்பிட்டிய உயிரிழந்தார்.

அவரது சேவையைப் பாராட்டி, நவம்பர் 30ஆம் திகதி முதல் அவர் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கெப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே சியம்பலாப்பிட்டிய விபத்துக்குள்ளானார்.

அப்போது ஹெலிகொப்டர் அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து ஏற்பட்ட சமயத்தில் விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்தனர்.

பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எவ்வாறாயினும், இதில் பிரதான விமானி, 41 வயதான விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாப்பிட்டிய உயிரிழந்தார்.

அவர் 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவமுள்ள விமானி என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

பாராளுமன்ற நடவடிக்கைகள் நாளை வரையில் ஒத்திவைப்பு

இலங்கையின் புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு