சூடான செய்திகள் 1

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(UTV|COLOMBO) நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காகவே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விமானத்தில் நடந்த விசித்திரம்

மாணவர்களில் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

கேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு: மூடப்பட்டது பேராதெனிய பல்கலைக்கழகம்