வகைப்படுத்தப்படாத

அல்ஜீரிய ஜனாதிபதியை நீக்குமாறு இராணுவத்தளபதி வலியுறுத்தல்

வட ஆபிரிக்க நாடான அல்ஜீரிய இராணுவத்தளபதி நாட்டை ஆள்வதற்கான உடல் தகுதி தமக்கில்லை என ஜனாதிபதி அப்டெலஸிஸ் பூட்டேபிளிகா (Abdelaziz Bouteflika) பிரகடனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அல்ஜீரிய ஜனாதிபதிக்கு எதிராக கடந்த பல வாரங்களாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையடுத்து, அந்நாட்டு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் அஹ்மட் கயெட் சாலா (Ahmed Gaed Salah) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஐந்தாவது தடவையாகப் போட்டியிடப் போவதில்லை என அல்ஜீரிய ஜனாதிபதி அப்டெல்லஸீஸ் பூட்டேபிளிகா ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.

எனினும், தேர்தல் தாமதிப்பதானது, 82 வயதான ஜனாதிபதி தமது பதவியை நீடிப்பதற்காக மேற்கொள்ளும் சதிச்செயல் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

புகையிரத மலசலகூடத்தில் குடும்பஸ்தரின் சடலம்

දෙවන තරඟයෙන්ද ශ්‍රී ලංකාවට කඩුලු 7ක ජයක්

US House condemns Trump attacks on congresswomen as racist