வகைப்படுத்தப்படாத

அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு

(UTV|ALGERIA)-அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தபப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவில் நேற்று இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளனர்.

அல்ஜீரியாவின் பபாரிக் Boufarik பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த இராணுவ விமானத்தில் 200 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அல்ஜீரியாவில் 3 நாட்கள் துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு

கேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு

2017ல் பாதணி மற்றும் தோற்பொருள் ஏற்றுமதி மூலம் 1800 கோடிக்கு மேல் வருமானம்