சூடான செய்திகள் 1

அலோசியஸ் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO)-வௌிநாடு செல்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு தொடர்பில் எதிர்வரும் 05ம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜெப்ரி அலோசியஸ் முன்வைத்துள்ள கோரிக்கை மனு இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

நடுவானில் தடுமாறிய விமானம்:நிலை பதட்டமடைந்த விமானிகள் (video)

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு