உள்நாடு

அலை வடிவக் காற்றின் தாக்கம் – 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாளை (18) தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக இன்று (17) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – அரசின் எதிர்பார்ப்பும் அதுவே – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

கொழும்பு – கண்டி புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி – மக்கள் காங்கிரஸ் , ஈபிடிபி, சைக்கிள் ஆதரவாக வாக்களிப்பு – தேசிய மக்கள் சக்தி வெளி நடப்பு!

editor