உள்நாடு

அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 2.06 பில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், குறித்த யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சபுவித மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யவும் அமர்வு உத்தரவிட்டது.

Related posts

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

editor

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு

editor