உள்நாடு

அறுகம்பே தாக்குதல் – முன்னாள் புலிகள் உறுப்பினர்களைப் பயனபடுத்த திட்டமாம்!

அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களில் மாலைத்தீவை சேர்ந்த நபரொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸாா் அறிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ததன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்குத் அறிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாகவும், மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றத்திடம் பொலிஸாா் கோரிக்கை முன்வைத்துள்ளனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முன்னாள் தமிழீல விடுதலை புலிகளை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்த சந்தேக நபர்கள் திட்டம் தீட்டியுள்ளதாக மூன்று சந்தேகங்களை முன்னிருத்தி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் கைதாகி விடுதலையான முன்னாள் தமிழீல விடுதலை புலிகளை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்த சந்தேக நபர்கள் மெகசின் சிறைச்சாலைக்குள் வைத்து திட்டம் தீட்டியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

Related posts

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று

ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு அதன் கலசாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்