வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தன்னை மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தால், சமூகத்தின் மற்றும் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும், ஒரு தனிநபரின் அல்லது சில நேர்மையற்ற நபர்களின் தனிப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்காக அல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சீர்திருத்த வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.