உள்நாடு

அறநெறி பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

(UTV | கொழும்பு) –    நாட்டின் சூழ்நிலை கருதி அறநெறி பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கான இந்துமதவிவகார இணைப்பாளர் பிரம்ம சிறி இராமசந்திர குருக்கள் பாபுஷர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் நிலைமை கருதி பாடசாலைகளை எதிர்வரும் வாரமும் மூடிவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி இந்துமத அறநெறி பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்க்கு கௌரவம்

லிட்ரோ நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில்