அரசியல்உள்நாடுவீடியோ

அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஹரிணி அதிரடியாக பதில் வழங்கினார்

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழு, தற்போது கற்பிக்கப்பட்டு வரும் பாடநெறிகளைப் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து கற்பித்தல் அல்லது தற்போது கற்று வரும் பாடநெறிகளுக்கு இணையான பிற பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடநெறிகளுடன் இணைத்தல், அதேபோன்று பல்கலைக்கழக நடவடிக்கைகளை தற்போது செயல்பட்டு வரும் விதத்திலேயே செயல்பட விடுவதோடு தேவையான வளங்கள் மற்றும் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் தற்போதைய பாடநெறிகளை முறையாகவும் தரமாகவும் செயல்படுத்துவது என இரண்டு பிரதான தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கிறது.

இந்த இரண்டு பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான பரிந்துரைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்குச் சிறிது காலம் தேவைப்படும். அதற்கமைய, ஒவ்வொரு பாடநெறிக்கும் மிகவும் பொருத்தமான பரிந்துரையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

ஆகவே, முதலாவது குழுவின் பட்டப்படிப்பு முடிவடைவதற்குள் விரைவாகத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவற்றில் எந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தினாலும், தற்போதுள்ள பாடநெறிகளின் சிறப்பம்சங்களை மாற்றலாகாது என குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்டதொரு பாடநெறி இந்த நாட்டில் இந்தப் பல்கலைக்கழகத்தில் திறம்படக் கற்பிக்கப்படுமாயின், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, மிகவும் பொருத்தமான சிறப்பம்சத்தைக் கற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து பாடத்திட்டங்களைத் தயாரிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

பல்கலைக்கழகத்தில் நிலவி வருகின்ற இடவசதி பற்றாக்குறைக்கு விரைவாகத் தீர்வு காண தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நுகேகொடையில் அமைந்திருக்கும் பீடத்தைக் கம்பஹாவில் தேவையான இடவசதிகள் இருக்கின்ற இடத்திற்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

Related posts

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

தொடர்ந்தும் நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பு

கொழும்பு – இராஜகிரியில் தீ விபத்து

editor