அரசியல்உள்நாடு

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பி – பிடியாணையை மீளப்பெற உத்தரவு

வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

அவர் சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டிருந்தார்.

2021ஆம் ஆண்டு பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கு, இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

திரிபோஷ நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

editor

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

editor

மேலும் 204 பேர் சிக்கினர்