அரசியல்உள்நாடு

அரைகுறை வேலைத்திட்டங்களினால் மக்கள் வரிப்பணம் வீணாகின்றது – அஷ்ரப் தாஹிர் எம்.பி

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாக கல்முனை காணப்படுகின்றது. கல்முனையை டுபாயாக மாற்றுவேன் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மார்தட்டி பேசி பேசி இன்று வரை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்.

கல்முனையில் அமைந்துள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான 40 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டிட மொன்று காணப்படுகின்றது.

அதில் பல நிறுவனங்கள் வாடகை ஒப்பந்த அடிப்படையில் பயன்பெற்று வருகின்றது. அக்கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்படாமல் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.

தயவு செய்து அக்கட்டிட தொகுதியினை முழுமையாக அகற்றிவிட்டு 10 அல்லது 15 மாடிகளைகளைக் கொண்ட நவீன வர்த்தக கட்டிட தொகுதி ஒன்றை இந்த அமைச்சின் ஊடாக அமைத்து கல்முனை முகவெற்றிலையினை அழகுபடுத்துமாறு அரசாங்கத்திடன் கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நீர் வழங்கல் அமைச்சின் உடைய விவாதத்தின் போது (24) உரையாற்றியிருந்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், நகர திட்டமிடல் அமைச்சானது இந்த நாட்டிலே நகரங்களையும் கிராமங்களையும் ஒழுங்கு படுத்துகின்ற மிகவும் முக்கியமான அமைச்சாக கானப்படுகின்றது.

கடந்த காலங்களில் இந்த அமைச்சில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அந்த அமைச்சினூடாக எதை செய்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடியவனாக சில விஷயங்களை இங்கு முன்வைக்கிறேன்.

அதே போன்று தான் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கல்முனை பொதுச்சந்தையும் மிகவும் பழமை வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.

அங்கு ஒரு முறையான மலசல வசதிகள் கூட இல்லாமல் வியாபாரிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இதனையும் இந்த அமைச்சு கவனத்திலெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த அமைச்சின் ஊடாக அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களோடு இணைந்து கழிவகற்றல் முகாமைத்துவத்தினை முறையாக மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதே போன்று மாநகரசபைக்குற்பட்ட பிரதேசங்களில் காணப்படும் சுனாமி வீட்டுத்திட்டங்களுக்கு முறையான கழிவகற்றல் முறைமை இல்லாமல் அம்மக்கள் அவதியுற்ற நிலை காணப்படுகின்றது. இதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கான காணி, வளங்கள் போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றது.

அவற்றை நிவர்த்திக்கும் வகையில் அம்பாறை, உஹன, மகாஓயா போன்ற பிரதேசங்களில் உள்ள காணிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிந்தவூர் வெளவாலோடையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சிற்கு சொந்தமான கடற்கரை பூங்கா என்ற பெயரில் வெறும் சுற்றுமதில்களுடன் காணப்படுகின்றது.

அதன் பராமரிப்பிற்கான செலவுகளை நிந்தவூர் பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கு வருடமொன்றுக்கு காவலாளிக்கான சம்பளமாக 20 லட்சத்திற்கும் அதிகமாக நிந்தவூர் மக்கள் வரிப்பணத்தில் செலுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே மிக அவசரமாக அந்த இடத்தினை பார்வையிட்டு அந்த திட்டத்தை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு அருகில் காணப்படும் வெளவாலோடை களப்பினை அழகு படுத்தி மக்கள் பயன்பெறும் சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மன்னார் சிலாவத்துறையில் அமைக்கப்பட்டு வரும் கலாச்சார மண்டபத்தினை பூரணப்படுத்த தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இன்று பாராளுமன்றத்தில் தனது ஆலோசனைகளை முன்வைத்திருந்தார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

மஹிந்த ராஜபக்ஷவின் குண்டு துளைக்காத வாகனமும் இனி இல்லை – அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் – ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே

editor

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

editor

முச்சக்கர வண்டி லொறியுடன் மோதி விபத்து – நெதர்லாந்து பெண் பலி

editor