உள்நாடு

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்

(UTV|கொழும்பு)- தேசிய அருங்காட்சியகங்களை ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, போது விடுமுறை தினம் அல்லாத ஏனைய தினங்களில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணிவரை, அருங்காட்சியகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரே தடவையில் அதிகபட்சமாக 15 பார்வையாளர்கள் எனும் வகையில், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையாளர் ஒருவரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அருங்காட்சியகங்களுக்குச் செல்வதற்கு முன்னர் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, நேரம், திகதியை முன்பதிவு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை, www.museum.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Related posts

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’

முஸ்லிம் ஜனாஸாக்களுக்கு மட்டுமா One Law One Country சட்டம்? [VIDEO]