உள்நாடுவணிகம்

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV| கொழும்பு)- அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கல்முனை, சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் பிரார்த்தனை – நிசாம் காரியப்பர் எம்.பி பங்கேற்பு

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம்

editor

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு இன்று