வணிகம்

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

(UTV|COLOMBO) அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெள்ளை சம்பாவின் உயர்ந்தபட்ச சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 85 ரூபா என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவாகவும் நிவாரண விலையாக உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நாளை முதல் நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை

இன்று முதல் வரிகள் இரத்து – நிதியமைச்சு

இறப்பர் மரக்கன்றுகளை நாடு தழுவிய ரீதியில் நடுவதற்கான வேலைத்திட்டம்