வகைப்படுத்தப்படாத

அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை

(UTV|COLOMBO)-தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 15ம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் முக்கியமான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைக் கூறியுள்ளார்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக சுகாதாரச் செயலாளரினால் வழங்கப்பட்ட பதில் குறித்து கலந்தாலோசிப்பதற்காக நடத்தப்பட்ட விஷேட மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நலின் டி ஹேரத், சய்டம் நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Three die in Medawachchiya motor accident

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு…

Term of Presidential Commission probing into corruption and malpractices extended