உள்நாடு

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (11) முதல் செயல்படுத்தப்படவிருந்த நாடளாவிய பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

வைத்தியர்களின் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுடன், நாளை காலை 8.00 மணிக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

அதன்படி, சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கிடைத்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு நாடளாவிய பணிப்புறக்கணிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு இடைநிறுத்தியுள்ளது.

Related posts

இலங்கைக்கான சீனத் தூதுவர் – சபாநாயகரை சந்தித்தார்

editor

இரசாயன உர இறக்குமதி : தனியார் துறையினருக்கு அனுமதி

ஹஜ் யாத்திரைக்கு சென்ற 2 இலங்கையர்கள் மரணம்!