அரச சேவையில் 70,000 பேரை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் கணிசமானளவு சுகாதாரத் துறையில் இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி, நிர்மாண செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக ரூ. 45 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் சுகாதார சேவை உதவியாளர்களாக 1900 பேரை இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து சுகாதாரத்துறை பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொதுவாக அரசாங்க சேவையில் 70,000 பேரை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.