சூடான செய்திகள் 1

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-அரச சேவையின் சம்பள முரண்பாட்டை சரி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச சேவையில் காணப்படுகின்ற சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 15 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

புகையிரத, தபால், சுகாதாரம் போன்ற அரச துறைகளின் சம்பள கட்டமைப்பில் காணப்படுகின்ற முரண்பாடுகளை தீர்ப்பதற்காக பரிந்துரைகள் முன்வைப்பது குறித்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

 

 

 

Related posts

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !