அரசியல்உள்நாடு

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு – 15 வருவாய் ஆய்வாளர்களுக்கு நியமனம்

சப்ரகமுவ மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 15 வருவாய் ஆய்வாளர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றையதினம் (14) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவின் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சபரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் எஸ்.பி.கே. போதிமன்னவின் கண்காணிப்பின் கீழ் மேற்படி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகள் உள்ளூராட்சித் திணைக்களங்கள் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சேவையில் அமர்த்தப்பட உள்ளதுடன்
இவர்கள் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களின் மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு இணைக்கப்பட உள்ளனர்.

அதன்படி, யட்டியந்தோட்டை பிரதேச சபை, பலாங்கொடை பிரதேச சபை, தெரணியாகலை பிரதேச சபை, இரத்தினபுரி மாநகர சபை, கொடகவெல பிரதேச சபை, பெல்மதுல்ல பிரதேச சபை, வெலிகெபொல பிரதேச சபை, மாவனெல்ல பிரதேச சபை, குருவிட்ட பிரதேச சபை, கலவான பிரதேச சபை, தெஹியோவிட்ட பிரதேச சபை, இரத்தினபுரி பிரதேச சபை, கேகாலை நகர சபை, எம்பிலிப்பிட்டிய நகர சபை மற்றும் அரநாயக்க பிரதேச சபை ஆகியவற்றில் இணைக்கப்பட உள்ளனர்.

சபரகமுவ மாகாணத்தில் உள்ளூராட்சித் நிறுவனங்களின் ஊழியர்கள்
இவ்வாறு வருவாய் ஆய்வாளர் தரம் III க்கான தேர்வில் தோற்றி தேர்ச்சி பெற்று நியமனம்பெற 15 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மேற்படி தேர்வுக்கு 96 பேர் தோற்றி இருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சபரகமுவ மாகாண ஆளுநர் உள்ளூராட்சி நிறுவனங்களில் வருமானத்தை சரியாக சேகரிப்பது ஒரு சவால்.

மக்களுடன் மோதல்களை ஏற்படுத்தாமல் சரியான வருமானத்தை சேகரிப்பது உங்கள் கடமை.

உங்கள் கடமையை சரியாகப் புரிந்துகொண்டு உங்கள் மனசாட்சிப்படி நேர்மையாகச் செயல்படுங்கள் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனித்தா,
பிரதான அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமேதானி மாதரஹேவகே, சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி ஆணையர் (பதில்) நிஷாந்த சமன்குமார, உதவிச் செயலாளர்களான இசுரி ரத்நாயக்க , மனோரி குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

இராணுவ வீரர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது!

editor

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்