வகைப்படுத்தப்படாத

அரச அளவையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும்?

(UDHAYAM, COLOMBO) – ஆறு கோரிக்கைகளை முன்வைத்து அரச அளவையாளர்கள் சங்கம் முன்னெடுத்துவரும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இன்று இடம்பெறும் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அளவையாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகும்புர இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூட்டம் இன்று காலையில் ஆரம்பித்து இடம்பெற்றுவருகின்றது.

கடந்த சில தினங்களாக அரச அளவையாளர்கள் சங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி அளவை பணிகளை தவிர்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 ක්‍රිකට් ලෝක කුසලානය එංගලන්තයට

சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

மின் கட்டணம் உயர்வு?