உள்நாடு

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அச்சக திணைக்களத்தில்

(UTV|கொழும்பு)- தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து அரசாங்கத்தின் அச்சு நடவடிக்கைகளும் அரச அச்சுத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச அச்சுத் திணைக்களத்தின் முன்னேற்றம் குறித்து நேற்று(25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் முதற்கட்டமாக கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை ஏற்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

வீடியோ | பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அப்துல் வாஸித்

editor

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார அமைச்சு

ஜெட் விமானம் விபத்து – காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை – விமானப்படை ஊடகப் பேச்சாளர்

editor