உள்நாடு

அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி அளித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று(24) கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியிலிருந்து ஐ.டீ.எச் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் பயணித்த முச்சக்கர வண்டி சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அயல் நாடுகளிலிருந்து எவருக்கும் கடல் வழி மூலமாக இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான வருவோரை தடுப்பதற்காக கடற்படையும் இராணுவமும் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அனுராதபுர பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

editor

இதுவரை 895 கடற்படையினர் குணமடைந்தனர்

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல்