உள்நாடு

அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளைய தினம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் கையெழுத்துகள் பெறப்பட்டதன் பின்னர் அதனை சபாநாயகருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்திலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணைக்கு குழு!

editor

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை