உள்நாடு

அரசியல் பழிவாங்கல் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- 2015 முதல் 2019 நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பாணிப்பாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரியுமான ஷானி அபேசேகர, பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோரை, அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.திசேரவையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

NPP யின் எம்.பி கோசல நுவன் ஜயவீர மாரடைப்பால் மரணம்

editor

சுமந்திரனின் அறிவிப்பு சிறந்த செய்தி – அமைச்சர் சுசில்

editor

நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் தீ

editor