உள்நாடு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலம் – குழு நியமனம்

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை உப குழு ஒன்று அரசினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில மற்றும் அலி சப்ரி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

19 ஆம் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து, 20 ஆம் திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வருவதற்கு இன்றைய தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம், துறைமுக அதிகார சபையின் கீழ்

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பு

editor

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

editor