அரசாங்க வைத்தியசாலைகளில் முதல்முறையாக உணவுப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு தனித்தனியாக சத்தான உணவை வழங்கும் முன்னோடித் திட்டம் நேற்று (06) மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.
