அரசியல்உள்நாடு

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த எதிர்பார்க்கிறது? – சஜித் பிரேமதாச கேள்வி

திசைகாட்டியின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது எப்போது?

நிலையியற் கட்டளை 27(2) இன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.09.24) சபையில் எழுப்பிய கேள்வி.

இலங்கைக் குடியரசின் இறையாண்மை மக்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்து காணப்படுகின்றது. இறையாண்மையைத் துறக்க முடியாது என்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

மக்களின் இறையாண்மையை உட்சபட்சமாக பக்க பலப்படுத்த, சட்டவாக்கத்துறை, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவை பரஸ்பர புரிதலுடனும் சுயாதீனமாகவும் செயல்பட வேண்டும்.

பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்ட அரசாங்கத்தின் கீழ் இந்நிறுவன கட்டமைப்புகளின் சுதந்திரம் தடைபடுவது இயல்பானதோடு, இந்த அரசாங்கத்தின் கீழும் இதில் மாற்றத்தைக் கண்டுகொள்ள வாய்ப்பில்லை என்றே புலப்படுகின்றது.

அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்த பிரகாரம், அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று அவர்கள் கூறினாலும், இன்னும் அப்படிப்பட்ட ஒரு விடயத்திற்கு எந்தத் தயார் நிலையும் இல்லை என்றே தெரிகிறது.

மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் நேர்மையை சோதிப்பதற்கான அளவுகோல்களாக அமைந்து காணப்படுவன, அவற்றின் செயல்திறனை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் முற்போக்கான சீர்திருத்தங்கள் என்பனவாகும்.

இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன். இவற்றுக்கு உரிய பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

  1. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கை அறிக்கையில் பக்கம் 194 இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம், அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் இன்னும் எதிர்பார்க்கிறதா? ஆமெனில், இந்நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அரசியலமைப்பு திருத்தச் செயல்பாட்டில் இந்த பாராளுமன்றத்தை எப்போது மட்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்?
  2. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து அரசாங்கத்தின் கருத்து நிலைப்பாடு யாது?
  3. அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுத்தால், இதற்கான கால எல்லையை இந்த சபைக்கு சமர்ப்பிப்பீர்களா?
  4. அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை எப்போது மட்டில் நடத்த எதிர்பார்க்கிறது?
  5. மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ந்தும் எல்லை நிர்ணய நடவடிக்கையுடன் சிக்க வைத்து தாமதப்படுத்துவது அரசாங்கத்தின் நிலைப்பாடா ? இல்லையென்றால், பழைய (விகிதாசார) முறையின் கீழ் தேர்தலை நடத்துவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த சபைக்கு தெளிவுபடுத்துவீரா ?
  6. நீதித்துறைக் கட்டமைப்பின் மீது இழக்கப்பட்ட பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இற்காக வேண்டி, அரச சார்ப்பில் வழக்கு நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வெளியே மாகாண ரீதியாக அரசின் பிரதான வழக்குரைஞர் காரியாலங்களை நிறுவுவோம் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனை எப்போது எப்போது நிறைவேற்றுவீர்கள்? இது தவிர, கூடிய மட்டத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த வழக்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட சில நீதிபதிகளினது இடமாற்றம், சேவை இடை நிறுத்தம், பதவி உயர்வு வழங்குவது போன்ற விடயங்கள் தற்சமயம் சமூகப் பேசு பொருளாக காணப்படுகின்றன. இது குறித்த அரசாங்கத்தின் மதிப்பீடுகள் யாவை ?

Related posts

நேருக்கு நேர் மோதி 02 வேன்கள் விபத்து

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் விமானம்

editor

தேர்தல் சட்டமீறல்கள் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்