அரசியல்உள்நாடு

அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமை சார் விடயத்தில் மெத்தனப் போக்கை காண்பிக்கின்றது – சிறிநாத் எம்.பி

அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகள் சார் விடயத்தில் மெத்தனப் போக்கை காண்பிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2025 முடிந்து 2006 ஆரம்பிக்கின்றது. அந்த வகையிலே உண்மையிலே தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்தி வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே மிஞ்சி இருக்கின்றது.

2025 புயல் ஏற்பட்டு தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலும் மிகப் பெரிய அளவு அனர்த்தங்களினால் அடிப்படை கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

போர்க்காலப் பகுதியில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்களை இன்னும் மீண்டெள முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்திருக்கின்ற வேளையிலே போருக்கு பின்னராக கூட வடகிழக்கிலே பாரியளவு நிவாரணப் பணிகள் மீள் கட்டுமானங்கள் தமிழ் மக்களுக்கான போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான எந்தவிதமான விசேட செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இன்று இந்த புயல் தமிழ் மக்களின் பிரதேசங்களையும் தமிழ் மக்களையும் கட்டி போட்டு அவர்களுடைய அனைத்து நிலைமை மாறி இருக்கின்றது.

இந்த வகையில் இந்த அரசாங்கம் இந்த விடயத்தை எவ்வாறு தமிழ் மக்களுக்காக கொண்டு செல்ல போகின்றது அல்லது வழமைபோலவே ஒட்டுமொத்தமாக முழு இலங்கைக்குமான செயல்திட்டங்கள் என்ற அடிப்படையிலே வடகிழக்கு பிரதேசங்களுக்கு மிகக் குறைந்த அளவான விடயங்களை கிள்ளி தெறித்துவிட்டு எல்லோருக்கும் நாங்கள் சமமாக கொடுக்கின்றோம் என்று சொல்லிவிடப்போகின்றதா ? என்ற ஐயப்பாடும் இருக்கின்றது.

ஜனாதிபதி நிறைய விடயங்களை அறிவித்திருக்கின்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விடயங்களும் கொண்டு செல்லப்படும் என்று.

ஆனால் அந்த நிலைமைகள் மிக விரைவாக கொண்டு செல்லப்படுகின்றனவா? சிதைந்துபோன எங்களுடைய பிரதேசங்கள் அபிவிருத்திக்கான பணிகள் முழுமையாக கொண்டு செல்லப்படுமா? ஏற்கனவே நாம் இந்த வருடத்திலே பாராளுமன்றத்திலே பல விடயங்களிலே தமிழ் பிரதேசங்களில் கட்டுமானங்கள் சம்பந்தமாக பல விடயங்கனை முன் வைத்திருந்தோம்.

அவற்றைக் கூட முழுமையாக செய்ய முடியாமல் இந்த புயல் அனர்த்தத்தினால் பாரியளவு இழக்கப்பட்ட விடயங்கள் விலக்கப்பட்டுள்ளதாக அமைந்திருக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அதற்கு அப்பால் மிக முக்கியமாக தமிழ் மக்களின் பல அடிப்படை விடயங்கள் மீறப்பட்டு இருக்கின்றன தமிழ் பிரதேசங்களிலே பல அடிப்படையில் விடயங்கள் மீறப்பட்டுள்ளது.

யாழ் தையிட்டி புத்தர் சிலை விவகாரம், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் கூட சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படாது ஏதோ சாக்கு போக்கு சொல்லி விடயங்கள் கையாளப்படுகின்றன.

அவ்வாறே தமிழ் பிரதேசங்களில் தொல்பொருள் விடயங்கள் என்ற அடிப்படையில் பதாதைகள் நாட்டப்பட்டு அவற்றை பிரதேச சபையின் ஊடாக அகற்றப்பட்டதை எதிர்த்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிஸ் திணைக்களமும் தொல்பொருள் திணைக்களமும் மும்முரமாக நின்று இருந்தது.

இந்த விடயங்களை தமிழ் மக்களுக்கு பாரியளவு சந்தேகங்களையும் பாரிய ஒரு நிற்கதியான நிலையையும் மனதளவினை உருவாக்கி இருக்கின்றது அதற்கு அப்பால் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆகக் குறைந்த தீர்வாக 13ஆவது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்கள் கூட பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த விடயத்திலே இந்தியாவும் ஒத்துழைப்புடன் வழிகாட்டுதல் கொண்டுவரப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் ஊடக மாகாண சபை அதிகாரங்கள் வழங்கப்படாது இருக்கின்றது.

இந்த நிலையிலே இந்திய வெளிநாட்டு அமைச்சர் அண்மையில் வந்திருந்தார்.

தமிழரசு கட்சி அல்லது தமிழ் கட்சிகள் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கம் சம்பந்தமாக ஒரு இறுக்கமான கோரிக்கையை முன் வைத்திருந்தது அதனை செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கின்றது.

நாட்டின் நடுநிலைமையூடாக கொண்டுவரப்பட்ட விடயங்கள் தமிழ் மக்களுக்காக அவர்கள் எதிர்பார்க்கின்ற ஆக குறைந்த அந்த மாகாண சபை அதிகாரங்களை கூட நிலைநாட்டுவதற்கு இந்த புதிய அரசாங்கம் ஒரு சரியான ஒரு முன்முனைப்பு காட்டப்படவில்லை.

அதேவேளை புதிய அரசாங்கத்தின் அரசியல் தீர்வுகள் சம்பந்தமாக முன்வைப்புகள் இந்த அனர்த்தத்தின் காரணமாக பின் போடப்படும் சூழ்நிலைகளை உருவாக்கிவிடுமா? அல்லது மாகாண சபை தேர்தலை பின் போட்டு தமிழ் மக்களுக்கு அந்த விடயங்களை பகிர்ந்து அளிப்பது கூட பின் நிற்குமா என்பது பார்க்க வேண்டிய விடயமாக இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையிலே சமத்துவத்தைபற்றி பேசுகின்ற அரசாங்கம் போதை ப்பொருள் மற்றும் ஊழலுக்கு எதிராக மிக விரைவாக நடவடிக்கைகள் எடுக்கும் அரசாங்கம் ஏன் தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தமாகவும் அபிவிருத்தி சம்மந்தமாக ஒரு மெத்தனப் போக்கை காண்பிக்கின்றது என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

2026 வரப்போகின்ற புத்தாண்டிலே மிக விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அதேவேளை மாகாணசபைத் தேர்தலை மிக விரைவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு முன் வைத்திருக்கின்றோம். கடந்த முறை ஜனாதிபதியை சந்தித்தபோது கூட நாங்கள் எங்களுடைய அழுத்தமான கோரிக்கையாக அதை முன் வைத்திருந்தோம்.

மாகாண சபை நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் கூட பல்வேறு சம்பந்தப்பட்ட தலைப்புகளின் ஊடாகவும் அரசியலமைப்பு விடயங்கள் சம்பந்தப்பட்ட பொழுதும் நாம் எமது கோரிக்கையை முன் வைத்திருக்கின்றோம்.

அரசாங்கம் இரண்டில் இரண்டு பெரும்பான்மை வைத்திருக்கின்றது இவற்றை பழைய தேர்தல் முறை ஊடாக நடத்துவதற்கு பாரின் நெருக்கடி இல்லை கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

எனவே இதனை மிக இலகுவாக பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இதற்கு அரச தரப்பு தனது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

தேர்தல் திணைக்களம் கூட தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றது ஆகவே இந்த இடத்தில் இப்போது நடத்துவதற்குரிய பொறிமுறை அரசின் கைகளில் தங்கி இருக்கின்றது.

கடந்த காலங்களிலே NPP அரசாங்கம் எதிர்கட்சியாக இருக்கின்ற பொழுது தேர்தல்கள் நடத்தப்படாது இருந்த போது அரசை குற்றச்சாட்டிய இவர்கள் இப்போது அதேபோன்று நிலைமையை கையாள்வதாக எங்களுக்கு தென்படுகின்றது.

ஆனால் இது சம்பந்தமான அழுத்தமான விண்ணப்பத்தையும் கோரிக்கையோ நாங்கள் தெளிவாக ஜனாதியிடம் அமைச்சர்களிடமும் பாராளுமன்றத்திலும் எடுத்து வைத்திருக்கின்றோம்.

அதற்கு அப்பால் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வந்தபோது கூட அனர்த்தம் காரணமாக மாகாணசபை தேர்தல் பின்போடக் கூடாது என்ற விடையத்தை தெரிவித்தோம்.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் சமஸ்டியை முன் வைத்திருக்கின்றார் இருந்த போதும் சமஸ்டி என்பது தமிழ் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை தமிழரசு கட்சிதான் இந்த விடயத்தை முன் வைத்திருந்தது ஆனால் இந்த விடயத்தை ஒரேபாய்ச்சலில் ஒரே இரவில் பெற்றுக்கொள்ள கூடிய விடயம் அல்ல எங்களுக்கு ஆகக் குறைந்த தீர்வாக பெறப்பட்ட அந்த மாகாண சபை அதிகாரத்தை கூட நாங்கள் பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

ஆகவே அவருடைய கொள்கை அதுவாக இருந்தாலும் யதார்த்தமான சூழ்நிலையை புரிந்து கொண்டு நாங்கள் எங்களுடைய களசெயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது.

தமிழரசுக் கட்சி மிகத் தெளிவாக அந்த விடயத்தில் தனது பயணத்தை செய்து கொண்டு இருக்கின்றது.

அரசியல் நிலைப்பாடு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அன்றி இருக்க வேண்டுமே ஒழிய மற்றைய கட்சிகளை குறைகூறி அதில் அரசியல் நடத்தக்கூடாது என்பதுடன்; தமிழ் மக்கள் தமிழரசு கட்சி தமிழ் தேசிய சார்பாகவும் தமிழ் மக்கள் உரிமைகள் சார்பாகவும் முன்வைக்கின்ற விடையங்களை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தான் இந்த ஆணையை தமிழரசு கட்சிக்காக தொடர்ச்சியாக தேர்தல் காலங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே அந்த மக்களின் ஆணையை தெளிவாக விளங்கிக் கொண்டு அந்த அடிப்படையிலே அந்த பாதையை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை தமிழரசு கட்சி மிக நிதானமாகவும் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றது ஆனால் தமிழ் தேசிய காங்கிரஸ் சமஸ்டியை நேரடியாக பெறுவதாக கூறுகின்றார்கள்.

ஆனால் சமஸ்டியை தமிழரசு கட்சி எந்த இடத்திலும் விட்டுக் கொடுப்பதாக கூறவில்லை அதை சிங்கள மக்களுக்கு அந்த வார்த்தை ஒரு நெருக்கடியாக சொல்லப்பட்டால் அதை வார்த்தை பிரயோகத்தின் ஊடாக அதன் உள்ளடக்கத்தை அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு கொண்டு செல்வதற்கான பயணத்தை தான் தமிழரசு கட்சி கொண்டிருக்கின்றது.

அதற்கு மீறி எங்களுடைய பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி நாங்கள் எந்த விடயங்களையும் செய்து விட முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றிலேயே எங்களுக்கு நன்றாக தெரியும்.

அந்த அடிப்படையிலே இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிக அதிகாரங்கள் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதை யதார்த்த கள அரசியல் ஆகும் என்றார்.

-விஷ்ணு

Related posts

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

editor

இலங்கையில் 10000 ஐ கடந்த கொரோனா தொற்று

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு