அரசியல்உள்நாடு

அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி – நாமல் ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ ,

”அரசாங்கத்துக்குள் இருந்துதான் சதி உருவானது. சர்வதேச சக்திகளும், பயங்கரவாத அமைப்புகளும் அரசாங்கத்தை கவிழ்க்க செயற்பட்டன. அதன் பலனாக நல்லாட்சி அரசாங்கம் உருவானது. ஆனால் மஹிந்த ராஜபக்ச ஒப்படைத்த அரசாங்கத்தை அல்ல கோட்டாபாய ராஜபக்ச பொறுப்பேற்றார்.” என்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தொகுதி மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலாவ நகரில் நடைபெற்றது.

‘ரஜரட்டயில் இருந்து போரை ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த தொகுதி மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற போதும் அவர் மாநாட்டில் உரையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

முறைப்பாடுகளுக்கு அமைய மணல் அகழ்வு அனுமதி இரத்து செய்யப்படும்

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு [VIDEO]