அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது – ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருப்போம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் பிமல்ரத் நாயக்க மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த அவர்:

சமகால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடாது. ஐந்து ஆண்டு காலங்கள் முடியும் வரை பதவிலிருக்கும்.

பதவிக்காலத்திற்குப் பிறகு மக்கள் முன்சென்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவோம். ஜனாதிபதியும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அரசாங்கத்தின் சொத்துக்கள். ஆளும் கட்சிக்குள் எந்தப் பிளவுகளும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரையும் அமைச்சர் விமர்சித்தார்.

அவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து இவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.

இவர்கள் சமூக ஊடகங்களில் தமது சேறு பூசும் பிர சாரங்களைத் தொடரலாம்.

ஆனாலும் எமது நிர்வாகத்தையோ அல்லது அரசாங்கத்தையோ இவை பாதிக்காது.

ராஜபக்ஷக்களின் காலத்தில், பிரேமதாசவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஆட்சியைக் கைப்பற்ற விமான விபத்தை எதிர்பார்த்திருந்ததாகவும் கூறப்பட்டது.

ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் உச்ச கட்ட காலத்தில் கூட, ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி ரணிலும் சஜிதும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காத்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

சுகாதார நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை – சன்ன ஜயசுமண.

அஸ்வெசும நலன்புரி சபையின்  தலைவர் இராஜினாமா!

editor

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor