அரசியல்உள்நாடு

அரசாங்கத்தில் திருட்டு இல்லாததால் கல்வித் தகுதியை தேடுகின்றனர் – பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கங்களின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி தேடப்பட்டதாக தெரிவித்தார்.

“எங்கள் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் கொலிபிகேஷன் தொடர்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இங்கே இருக்கும் நம் பலரின் கொலிபிகேஷனை தேடுகின்றனர். கொலிபிகேஷனை கேட்கிறார்கள், அதை கேட்கிறார்கள்… இதை கேட்கிறார்கள்.

மிகவும் ஆர்வமாக உள்ளனர். கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கங்கத்தில் உள்ளவர்களின் கல்வித் தகுதிகள் தேடப்படவில்லை என்பது ஒருபுறம் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்களின் திருட்டையே தேடினார்கள்.

எங்களின் திருட்டுகள் தொடர்பில் கண்டு பிடிக்க முடியாததால், கல்வித் தகுதியில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது சற்று முன்னேற்றமாகவே கருதலாம்.”

Related posts

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த சிறிதரன்!

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் குறைவு

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்