உள்நாடு

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஊர்வலம் இன்று (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.

நாளை மாலை 3.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகி அதன் முடிவில் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

‘அடக்குமுறைக்கு எதிராக, பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக, உரிமைகளுக்காகப் போராடுவோம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளம் சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், தொழிலாளர்களின் ஐக்கிய கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர தேசியப் பேரவை, வான்கார்ட் சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது.

Related posts

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

இலங்கையர்கள் ஹஜ்ஜில் கலந்து கொள்ள மாட்டார்கள்