உள்நாடுபிராந்தியம்

அயல் வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது – யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது, அந்தப் பெண் குறித்த நபரின் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான பெண்ணை நேற்றைய தினம் (31) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

ஒட்டுச்சுட்டான் விவகாரத்தில் இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

‘பொருளாதாரம் தெரியாத மூவரால் நாடு அழிந்தது’

தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை ஹொரண’யில்