உள்நாடுபிராந்தியம்

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சோக சம்பவம்

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் 03 தரத்தில் கல்வி பயின்று வரும் குறித்த சிறுவன் தந்தையை திருகோணமலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றிற்கு வேலைக்காக செல்வதற்கு துவிச் சக்கர வண்டியில் தனது 8 வயது சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிலிருந்து 100 மீட்டருக்கும் அப்பால் உள்ள வயல் பகுதியில் காலை 6.00 மணியளவில் யானை மறைந்திருந்த நிலையில் தாக்குதல் நடாத்திய போதுதந்தை தப்பி ஓடிச் சென்ற நிலையில் உயிர் தப்பியுள்ளார்.

இதேநேரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை தப்பி ஓடிய நிலையில் 08 வயது மகன் யானையின் பிடியில் மாட்டியுள்ளார்.

இதனையடுத்து யானை சிறுவனை தூக்கி வீசி சிறுவனின் தலையை மிதித்து தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்த நிலையில் பாரிய சத்தத்துடன் யானை கத்தி கதறி சென்றதை அவதானித்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது சிறுவன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்ததாகவும் இதனை அடுத்து கோமரங்கடவல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கோமரங்கடவல -இந்திக்கட்டுவெவ வயதுடைய அரோஷ தினால் நிம்ஷர ராஜபக்ச (08வயது) எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் யானையின் தாக்குதலினால் 10 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் குறித்த யானையின் தாக்குதல் மற்றும் யானைகளின் தொல்லை அதிகரிப்பு தொடர்பில் கோமரங்கடவல பிரதேசத்துக்கு பொறுப்பான வன இலாகா திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கூட யானையின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் யானை மின்வேலிகளை உடைத்துக்கொண்டு யானை கிராமத்துக்குள் உட்புகுந்து வருவதாகவும் யானையை விரட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் வன இலாக்கா அதிகாரிகளின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரிக்கின்ற படியால் உடனடியாக திருத்தப்படாத யானை மின்வேலிகளை புணரமைப்பு செய்து மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-அப்துல் சலாம் யாசீம்

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 120 பேர் கைது

இந்திய படகுகள் யாழில் ஏலம்

இன்றும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று