உள்நாடு

அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்றவரை ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன சந்தித்தார்

ஊவா ஹீசரா அகில இலங்கை (திறந்த) அம்பு எய்தல் போட்டியில் சந்தருவன் பிரியவன்ச வெற்றி பெற்றார்.

மேற்படி போட்டி இம்மாதம் 13 ஆம் திகதி பண்டாரவளை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற வீரர் சந்தருவன் பிரியவன்ச இன்றையதினம்(21)
சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவை
இரத்தினபுரியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

மேற்படி மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரரான சந்தருவன் பிரியவன்சவுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன
சபரகமுவ மாகாண சபை நிதியிலிருந்து முன்னதாகவே நிதியை ஒதுக்கியிருந்தார்.

சந்தருவன் பிரியவன்ச தனது சாதனைகளுக்கு உபகரணங்கள் பெருவதற்கு ஆளுநரால் பெற்று கொடுக்கப்பட்ட நிதி தனக்கு உதவியாக இருந்தற்காகவும் தெரிவித்தார்.

மேற்படி அம்பு எய்தல் வீரர் கடந்த காலங்களில் தேசிய வில்வித்தை போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளதம் குறிப்பிடத்தக்கது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள் – சஜித் | வீடியோ

editor

மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வேன் விபத்து

editor