அரசியல்உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம வின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்நாயக்க, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ். உதுமாலெப்பை, ஏ.ஆதம்பாவா, கே. கோடீஸ்வரன், எம்.ஏ. அஸ்ரப் தாஹிர், எம்.எஸ். அப்துல் வாசித் உள்ளிட்டவர்களுடன் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முக்கிய வேலைத்திட்டங்களான சுத்தமான இலங்கை வேலைத்திட்டம், கிராமிய வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2025ம் ஆண்டில் அம்பாரை மாவட்ட செயலகம் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் மற்றும் வேறு தாபனங்கள் உடாக செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி, வீதி அபிவிருத்தி, திண்மக்கழிவகற்றல், குடிநீர் திட்டம்,விளையாட்டு போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் இவ்விடயங்களில் அதீக அக்கரையுடன் பணியாற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

 இன்று கொண்டுவரப்படும் முட்டைகளின் மாதிரி திங்கட்கிழமை….

சஜித் பிரேமதாச தம்பதியினர் கங்காராம விகாரைக்கு

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V