உள்நாடுபிராந்தியம்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு – மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

அம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிழவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் அதனால் தங்களுக்கு நிவாரணம் தரப்பட வேண்டுமென்று மீனவாகள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை-
கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் பிரதேசத்தில் கடலானது சுமார் 50 அடி முன்நோக்கி நகர்ந்துள்ளது. இங்கு கடற்கரையை அண்மித்த வகையில் அமைக்கப்பட்டிருந்த கொங்றீட் நடைபாதை முற்றாக சேதமடைந்துள்ளது.

மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. மீனவர்களின் பொது ஓய்வு மண்டபமும் முற்றாக சேதமமைந்துள்ளது. இவற்றோடு வேறு சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

மீனவர்களின் வள்ளல்கள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் தூரமாக்கி வைக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது-
சாய்ந்தமருது பிரதேசத்திலும் மிகவும் மோசமான வகையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கும் கடல் முன்நோக்கி நகர்ந்துள்ளது. மீனவர்கள் தங்களின் மீன்பிடி வள்ளங்களை கரையை விட்டும் தூரமாக்கி வைத்துள்ளனர். மீனவர்களின் வாடிகளும் சேதமடைந்துள்ளன.

மாளிகைக்காடு
மாளிகைக்காடு பிரதேசத்தில் மையவாடிப் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மையவாடியின் பெரும்பகுதியை கடல் காவு கொண்டுள்ளது.

இதனால், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள உடல்கள் கடலிலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கு மாற்று மையவாடி ஒன்றினை தர வேண்டுமென்று மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.

நிந்தவூர்-
நிந்தவூர் பிரதேசத்திலும் கடலரிப்பு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மீனவர்களின் வாடிகள் சேதமடைந்துள்ளன. தென்னை மரங்களும் விழுந்துள்ளன.

-சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்

Related posts

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு நீதிமன்றத்தை நாடும் கல்வியைச்சர்!

BREAKING NEWS – ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் – தவிசாளராக ஹலால்தீன் தெரிவு!

editor