உள்நாடுபிராந்தியம்

அம்பாறை, பொத்துவில் பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்!

அம்பாறை, பொத்துவில், கோமாரி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் விபத்து இன்று சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.

கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பை நோக்கி சுற்றுலா சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸானது பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறையில் தொலைபேசிகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி – 07 பேர் காயம்

editor

வற் பதிவு சான்றிதழ் தொடர்பில் விசேட அறிவிப்பு!