உள்நாடுபிராந்தியம்

அம்பாறை பதியதலாவயில் காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை!

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்று (23) காலை கொல்லப்பட்டுள்ளதுடன் கொலையாளி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் காதலர்கள் என்றும் காதலன் தனது காதலின் கழுத்தை அறுத்த பின்னர் தானும் கழுத்தை அறுத்து தவறான முடிவை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த தாயும் தந்தையும் மஹாஓயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் சரோஜா உதயங்கனி என்ற 23 வயது இளம் பெண்ணாவார். தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர்.

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் குறித்த அறிவித்தல்

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்