அரசியல்உள்நாடு

அம்பாறையில் மந்த நிலையில் இடம்பெறும் வாக்களிப்பு

2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 478,000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்

Related posts

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கான திகதி

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு!