உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

அம்பாறை மாவட்டம் மருதமுனை – பாண்டிருப்பு பகுதிகளில் இன்று (20) இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை இருக்குமென தெரிவித்துள்ளனர்.

ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இம்மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மை காலங்களில் கடலாமைகள் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

editor

ரணிலின் கைது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது – கூட்டு சேர்ந்தவர்கள் சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும் – இளங்குமரன் எம்.பி

editor

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன