உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற கார் மீட்பு

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூடில் காயமடைந்த நிலையில் 56 வயதுடைய நபர் ஒருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரந்தெனிய-எகொடவெல சந்தியில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விசேட தேடுதலில் 1,481 பேர் கைது

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

editor