உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்று : மேலும் மூவர் குணமடைந்தனர்

கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம்

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு