வகைப்படுத்தப்படாத

அம்பகமுவ பிரதேசத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-அம்பகமுவ, பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை மூன்று பிரிவுகளாக பிரித்து எல்லை நிர்ணயிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

அம்பேகமுவ, பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எச்.டி. நந்தராஜினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு எதிர்வரும் ஆண்டு ஜனவரி 08ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை விளக்கம் வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக கால அவகாசம் வழங்குமாறும் சட்ட மா அதிபர் சார்பாக மன்றில் ஆஜரான சட்டவாதி கூறியிருந்தார்.

விடயங்களை கருத்திற் கொண்ட நீதிமன்றம் விசாரணைகளை பிற்போட்டு உத்தரவிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு…

Postal workers to launch sick-leave protest