அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பிரபல இளைஞர் ஆர்வலர் ஒருவருக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த காணொளியில், அமைச்சர் ஹேரத், ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பின்னணியில் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இழிவான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த காணொளி, அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக, அமைச்சர் ஹேரத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் சமிந்த ஜயநாத் தெரிவித்துள்ளார்.