சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்

(UTV|COLOMBO) கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து இரண்டு இலட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் எழுச்சிபெறும் இலங்கை-2019″ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன, அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் அசோக உட்பட அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்தார்

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து

கைது செய்யப்பட்ட நாலகடி சில்வா விளக்கமறியலில்