சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிசாத்தின் பணிப்புரைக்கமைய முள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் ஆராய்வு

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளியவளை கிராம மக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கென அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை அந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக முல்லைத்தீவு அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

வெள்ள நிவாரணத்தில் முள்ளியவளை பிரதேச மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் அவரது இணைப்புச்செயலாளர் அரச அதிபருடன் தொடர்பு கொண்ட போதே, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“இந்த பிரதேசம் உண்மையில் வெள்ளத்தின் நேரடி பாதிப்புக்கு உள்ளாகவில்லை. எனினும், பெருமழையினால் முள்ளியவளையில் கசிந்து வரும் நீரூற்றுக்களின் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டனர். அது தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அரச அதிபர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்புச்செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்விடன் உறுதியளித்தார் .

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக கையளிக்கவும் – சவூதி அரே­பியா

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்