உள்நாடு

அமைச்சர் பிரசன்னவின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொதுப் போக்குவரத்து சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த பொலிஸாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பியூலன்ஸ், பாடசாலை வேன் அலுவலக சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]

நாளை முதல் வெள்ளை முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை

குழந்தை வளர்ப்பு குறித்து விசேட வகுப்பு – சுகாதார அமைச்சு.